
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த மாரவில பகுதி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மாரவில பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போதே இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்போது நிர்ணய விலையை மீறி சம்பா அரிசியை விற்பனை செய்தமை,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அதன் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து வாங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





