இலங்கை

அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) அதிகாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

 

குறித்த காலப்பகுதியில் அங்கு 180 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 

அதேநேரம் ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றர் அளவிலும், தெரணியகலை பகுதியில் 122 மி.மீ. அளவிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

இதேவேளை நேற்று (14) இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்த போதிலும், அது இதுவரை எச்சரிக்கை மட்டத்தை அடையவில்லை என அவர் கூறினார்.

 

அதேபோல், அத்தனகலு ஓயாவின் தூனமலே அளவீட்டு நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button