
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார் அட்டை, சாரதி உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது
இந்நடவடிக்கை, குறைந்த வயதினரிடையே மதுபான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





