இலங்கை

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான டோ லாமை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, காவல்துறையின் குதிரைப்படைப் பிரிவினர் முன்செல்ல வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டதோடு, ஜனாதிபதியினாலட கௌரவ வரவேற்றும் வழங்கப்பட்டது

.அத்துடன், இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது முழுமையான அரச மரியாதையுடன் கூடிய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வியட்நாம் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு ஜனாதிபதிகளும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், இரு நாடுகளினதும் அரச பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button