இலங்கை

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

போர்த்துகல் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியான அல்கேவா (Lake Alqueva) பகுதியில், மனிதர்களுக்கு தோல் நோயை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஒட்டுண்ணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

‘ட்ரைக்கோபில்ஹார்சியா பிராங்கி’ (Trichobilharzia franki) என அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணி, பொதுவாக நீர்வாழ் பறவைகள் மற்றும் நத்தைகளை வாழ்விடமாகக் கொண்டவை.

எனினும், இவை ஏரி நீரில் நீந்துபவர்களின் தோலில் ஊடுருவி, கடுமையான அரிப்பு மற்றும் தடிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ‘ஸ்விம்மர்ஸ் இட்ச்’ (Swimmer’s itch) எனும் பாதிப்பை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட கள ஆய்வுகளின் போது, அங்குள்ள நத்தைகளில் இந்த ஒட்டுண்ணிகள் இருப்பது மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இடம்பெயரும் பறவைகள் மூலமாகவே இந்த ஒட்டுண்ணிகள் போர்த்துகல்லுக்கு பரவியிருக்கலாம் என ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அல்கேவா ஏரிப் பகுதியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர் நிலைகளில் இறங்கும் போது அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button