உலகம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ்

வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் அமெரிக்க விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவை சென்றடைகின்றனர்.

 

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமின்றி தப்பிய நிலையில், மன்னரின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என வெள்ளை மாளிகையும் பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளன.

 

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள மன்னர், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

 

ஈரான் போர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button