இந்தியா

தேர்தல் களத்தில் தவெக தொண்டர்களுக்கு பறந்த அவசர உத்தரவு – சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த பத்து நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

குறிப்பாக, மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாகச் சென்று, வீடு வீடாகச் சந்தித்து கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி வாக்குச் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது கட்சி வேட்பாளர்களுக்கு ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் கோருமாறும், தேர்தல் பணியில் ஈடுபடும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, ஒரு மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல்” என்று குறிப்பிட்டுள்ள விஜய், உண்மையான மக்களாட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button