இலங்கை

நாட்டின் பல மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதற்கமைய, மேல், சபரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண், ‘அவதானிப்பு’ (Caution Level) மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டே இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுகிறது.

 

நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதிக சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

அத்துடன், தொடர்ச்சியான உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

எனவே, போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருத்தல், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்தல் அல்லது மட்டுப்படுத்தல், நிழலான இடங்களில் ஓய்வெடுக்க முன்னுரிமை அளித்தல் ஆகிய மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button