இந்தியா

இந்திய சட்டசபைத் தேர்தல் – கருத்து கணிப்புகளுக்கு நாளை முதல் தடை

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 07 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 6.30 வரை கருத்து கணிப்புகளை நடத்துவதற்கு மற்றும் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

 

தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை (9) சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

அத்துடன் தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய திபதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button