
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
சீனாவின் ஷாங்காய் காம்போசிட் (SSEC) குறியீடு இன்று நண்பகல் அளவில் 0.53 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.
அதேபோல், சீனாவின் முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய CSI300 குறியீடு 0.74 சதவீத இழப்பைச் சந்தித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கின் ஹாங் செங் (HSI) குறியீடு 1.1 சதவீதமும், அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளான HSTECH குறியீடு 2.2 சதவீதமும் சரிவடைந்துள்ளன.
ஜப்பான் மற்றும் தென்கொரிய பங்குச்சந்தைகளும் இதேபோன்ற சரிவைச் சந்தித்துள்ளன.





