உலகம்

ஈரானின் கார்க் தீவு மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

ஈரானுடனான போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

 

ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு இந்த கார்க் தீவு மூலமாகவே நடைபெறுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த மையம் முடக்கப்பட்டால், ஈரான் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்பது ட்ரம்பின் கணக்காகும் என அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஈரான் விரைவில் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால், கார்க் தீவை பலப்பிரயோகம் மூலம் கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 

இதற்காக அமெரிக்கத் தரைப்படை வீரர்களை அங்கே களமிறக்கவோ அல்லது அந்தத் தீவை முழுமையாக அழிப்பதற்கோ அவர் தயங்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமானால், அது போரின் போக்கை முழுமையாக மாற்றியமைக்கும்.

 

எண்ணெய் ஏற்றுமதி முடங்குவது ஈரானின் போர் வலிமையைக் குறைக்கும் என அமெரிக்கா நம்புகிறது.

 

இருப்பினும், ட்ரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கைகள் எந்தளவிற்குச் செயல்பாட்டுக்கு வரும் என்பது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button