இந்தியா

ஸ்டாலின் சென்ற வாகனத்தை சோதனைக்குட்படுத்திய தேர்தல் அதிகாரிகள்

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

 

தமிழகத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாவுக்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அதிகாரிகள் அவற்றை விடுவிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button