உலகம்

பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய நாட்டு தூதுவர் ஒருவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

 

குறித்த தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB, பிரித்தானிய தூதுவர் “தன்னைப் பற்றி தவறான தகவல்களை அளித்தார்” என்று தெரிவித்துள்ளது.

 

மேலும், முறைசாரா சந்திப்புகளின் போது ரஷ்யப் பொருளாதாரம் குறித்த தகவல்களைச் சேகரிக்க அவர் முயன்றதாகவும் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, அந்தத் தூதர் “ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரித்தானியா முற்றிலும் மறுத்துள்ளது.

 

மேலும், ரஷ்யா ஒரு “ஆக்ரோஷமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட துன்புறுத்தல் பிரச்சாரத்தை” மேற்கொண்டுள்ளதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.

 

பிரித்தானிய தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவதை ஐக்கிய இராச்சியம் சகித்துக்கொள்ளாது என வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button