உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

 

ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

 

இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான போர் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று ஈரான் பாதுகாப்புத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அலி லாரிஜானியை குறி வைத்து இஸ்ரேலிய இராணுவம் ஒரு அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

 

இந்த தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.

 

எவ்வாயினும், இந்தத் தாக்குதலில் அலி லாரிஜானி வீரமரணம் அடைந்தாரா அல்லது காயமடைந்தாரா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

 

நேற்றிரவு நடந்த தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், அலி லாரிஜானியின் படுகொலையை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. மாறாக பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் கையெழுத்துச் செய்தி ஒன்றையே ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.

 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.

 

வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின்படி, நகரின் மையப் பகுதிகளில் இந்த வெடிப்புகள் உணரப்பட்டுள்ளன, ஆனால் எந்தெந்த குறிப்பிட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button