
எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பின்வரும் அதிரடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகின்றது:
ஜோன்ஸ் சட்டத்தில் தளர்வு (Jones Act Waiver): அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் நிலவும் பழைய சட்டக் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக நீக்குதல்.
ரஷ்ய எண்ணெய் மீதான தளர்வு: கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்யத் தற்காலிக அனுமதி வழங்கியமை.
சுற்றுச்சூழல் விதிகளில் தளர்வு: பெட்ரோல் உற்பத்தியின் போது விதிக்கப்படும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக நீக்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்க முயற்சித்தல்.
முன்னாள் அதிகாரிகளின் அதிர்ச்சி
ஹார்முஸ் நீரிணை முடக்கம் என்பது பல தசாப்தங்களாக அமெரிக்க பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை அச்சமாக இருந்து வந்த நிலையில், அதனைத் தடுக்கத் தவறியமை குறித்து முன்னாள் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
“இதை தடுப்பதற்கே நாம் பல தசாப்தங்களாகத் திட்டமிட்டோம், ஆனால் இது இப்படி நடக்கும் என்பதை நம்ப முடியவில்லை” என முன்னாள் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.





