இந்தியா

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார். “இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது. இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தென்னிந்தியாவின் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, இந்திய தேசிய உணவக சங்கம், இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் , பெங்களூரு ஹோட்டல் சங்கம், சென்னை ஹோட்டல் சங்கம், சென்னை தேநீர் கடைகள் சங்கம், ஒடிசா ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம் (HRAO) மற்றும் பல ஹோட்டல் உரிமையாளர்கள் எரிவாயு பற்றாக்குறையால் தங்கள் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

 

இதற்கிடையில், மும்பையில் சுமார் 20 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

மேலும் நிலைமை சீராகவில்லை என்றால், மும்பையில் சுமார் 50 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button