உலகம்

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு வாய்ப்பில்லை – நோபல் பொருளாதார நிபுணர் கணிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம், ஆனால் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியைப் போன்ற ஒரு பெரும் சரிவை இது ஏற்படுத்தாது என்று 2025 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசை வென்ற பொருளியலாளர் பிலிப் அகியான் தெரிவித்துள்ளார்.

 

இந்தப் போர் பல வாரங்களுக்கு நீடித்து, மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டொலரைத் தாண்டினால், அது 1973 ஆம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியைப் போன்ற (Oil Shock) ஒரு சூழலை உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

இது பணவீக்கத்தை வெகுவாக உயர்த்தும்.

 

போர் நீடித்தால் உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தநிலை ஏற்படுமே தவிர, அது ஒட்டுமொத்தப் பொருளாதார வீழ்ச்சியாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்வாறான அதிர்ச்சியைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஏனைய வளர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

1973 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு எதிராக ஒபெக் (OPEC) நாடுகள் மேற்கொண்ட எண்ணெய் தடையினால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய சூழலையும் அதனுடன் ஒப்பிட்டு அகியான் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button