உலகம்

தாக்குதலுக்குத் தயார் : அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் நேரடி இராணுவ நடவடிக்கை

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ( Pete Hegseth) பகிரங்கமாக இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அமெரிக்க மத்திய கட்டளையகமான CENTCOM வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்கர்கள் கொல்லப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, எந்தவிதமான மன்னிப்பும் இன்றி தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய கிழக்கின் போர், சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அதிரடி கருத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button