உலகம்

ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை – பதிலடி கொடுக்கத் தீர்மானம்

ஈரானின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் அதற்குப் பொருத்தமான முறையில் பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.

 

ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமான், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக இந்நாடுகள் தெரிவித்துள்ளன.

 

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நாடுகள் தமது வான்பரப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button