உலகம்

ரஷ்ய – ஜப்பான் உறவில் முறிவு : அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து

ரஷ்யா மற்றும் ஜப்பான் இடையிலான தூதரக உறவுகள் தற்போது ‘பூஜ்ஜியம்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது.
ஜப்பானின் “விரோதப் போக்கு” காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.ஜப்பானின் புதிய பிரதமர் சனா டகைய்ச்சி, ரஷ்யாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குரில் தீவுகள் (Kuril Islands) தொடர்பான உரிமை பிரச்சினையில் , இரு நாடுகளும் இதுவரை உத்தியோகபூர்வமான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

யுக்ரைன் விவகாரத்தில் ஜப்பான் எடுத்துள்ள முடிவுகளால், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முழுமையாக முடங்கியுள்ளதாக ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button