உலகம்

சிலியில் பரவி வரும் காட்டுத்தீ – 16 பேர் பலி : அவசரகால நிலை பிரகடனம்

சிலி நாட்டின் தலைநகரான சான்டியாகோவின் தெற்குப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயினால் இதுவரையில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிலி ஜனாதிபதி உடனடியாக அவசரகால அனர்த்த நிலைமையை (State of Emergency) அறிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மேலதிக இராணுவ மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரை ஈடுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதால், சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
விமானம் மற்றும் வானூர்தி மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button