இலங்கை

மீண்டெழுந்த இலங்கை அஞ்சல் துறை: 13.1 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை!

இலங்கை அஞ்சல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சி, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.

 

2025 ஆம் ஆண்டில் இலங்கை அஞ்சல் திணைக்களம் 13.1 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

 

 

இது திறைசேரி எதிர்பார்த்த இலக்கை விட அதிகமானது என அஞ்சல் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

 

 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அஞ்சல் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் 2025 இல் வழங்கப்பட்டுள்ளன.

 

இதன்படி ஜூன் 2025 இல் 378 உப அஞ்சல் அதிபர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற்றனர்.

 

அத்துடன் செப்டம்பரில், 1,000 அஞ்சல் உதவியாளர்களின் நியமனங்கள் முறைப்படுத்தப்பட்டன.

 

இந்தநிலையில் திறந்த போட்டி மூலம் 600 அஞ்சல் சேவை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு நடந்து வருவதாகவும், பெப்ரவரி 2026 இல் நியமனங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button