அரசியல்

நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button