
தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் நினைவு எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணி இன்றைய தினம் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 15ஆம் திகதி தொடக்கம் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு எழுச்சி வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலக்கியா தென்றல் அமைப்பின் அனுசரணையுடன் அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சுற்றுப் போட்டியானது நாளை மாலை வரையில் நடைபெறவுள்ளதுடன் சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





