
பிரான்சில் நாளையதினம் ஆயிரக்கணக்கானோர் ஊழல் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமது நாட்டு குடிமக்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்லவேண்டாம் என அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அமெரிக்க குடிமக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் செப்டம்பர் 19 திகதியிட்ட ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
பெரிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கையாக இருங்கள் என்றும், ஏனெனில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட முன்னெச்சரிக்கை இல்லாமல் வன்முறையாக மாற வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு
வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 21 அன்று மெட்ரோ மணிலாவில் ஏராளமான போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





