
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம் பாட்டன் சாமி வரும்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ் , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணிகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘எம் பாட்டன் சாமி வரும்’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் தனுஷ் எழுத, பின்னணி பாடகரான அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். கடந்த கால தசாப்தங்களில் கிராம மக்களின் குல தெய்வ நம்பிக்கை குறித்த இந்த பாடலை… தனுஷ் எழுதியிருப்பதும், அந்தோணி தாசன் அவருக்கே உரிய தனித்துவமான குரலில் பாடி இருப்பதும், இந்தப் பாடலுக்கு தெய்வீக உணர்வுடன் கூடிய கம்பீரம் கிடைப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.





