சுவிஸ்

சுவிசில் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பௌத்த இனவாத அமைப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்திற்கு இலங்கை இனவாத பௌத்த அமைப்பொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளைச் சந்தித்து அந்த அமைப்பு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்களின் கூட்டணியான ‘அரியகம்மட்டான’ என்ற அமைப்பே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

தேரரின் கோரிக்கை

அதன்போது, இலங்கையில் சிங்களவர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபையை உண்மையைக் கண்டறியும் ஆணையத்தை நியமிக்குமாறு அமைப்பின் தலைவரான கே. அரியமக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஆணையத்தை அமைப்பதற்குத் தேவையான நடைமுறைகளைத் தொடங்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள்

மேலும், இந்த விவகாரம் குறித்து மேலும் விரிவாக விளக்க, அரியமக்க தேரர் ஒக்டோபர் 13 வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்ற உள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த போர் காலத்தில் தமிழின அழிப்பு, மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட  போராட்டத்தில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் மேற்கண்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button