உலகம்

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (29) விசேட சட்டதரணி குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் இராணுவச் சட்ட நெருக்கடி மற்றும் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த தம்பதியினர் சம்பந்தப்பட்ட ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், யூன் மற்றும் கிம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தவறான முயற்சியில் ஈடுபட்டதற்காக ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிளர்ச்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் யூன் ஏற்கனவே விசாரணையில் உள்ளார்.

யூன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் பதவியேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட விசேட சட்டதரணிகளால் இந்த ஜோடி தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.

தென் கொரியாவில் முன்னாள் முதல் பெண்மணி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button