சினிமா

தம்பி ராமையா நடிக்கும் ‘மதர்’

அறிமுக நடிகர் சரீஷ்-  தம்பி ராமையா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மதர்’ எனும் திரைப்படம்- செப்டம்பர் மாதம் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

எழுத்தாளர் ரூபன் கதை, வசனம் எழுத, இயக்குநர் வின்சென்ட் செல்வா திரைக்கதை அமைக்க, அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதர்’ திரைப்படத்தில் சரீஷ்,  தம்பி ராமையா,  அர்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். தேவராஜன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரேசர் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இன்றைய காலகட்டத்தில் கணவன்- மனைவி உறவு மிகவும் சிக்கலானதாக மாற்றம் அடைந்துள்ளது. இந்த உறவிலா சிறு சந்தேகம் ஏற்பட்டாலும்..அது  உறவை சீர்குலைத்து விடும். இதனை பின்னணியாக கொண்டு உணர்வுபூர்வமான படைப்பாக ‘மதர் ‘ உருவாகியுள்ளது” என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button