இலங்கை

மன்னார் காற்றாலை பிரச்சினை – இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button