
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.





