விளையாட்டு

உலகக் கிண்ணம் உட்பட இரண்டு தகுதிகாண்களுக்கு தயாராவதற்கு ஜப்பான் கிரிக்கெடுக்கு SLC உதவவுள்ளது

கிழக்கு ஆசிய பசுபிக் மற்றும் ஆசிய பிராந்திய உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்றுகளுக்கு முன்னதாக பயிற்சி முகாம் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இணை உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஜப்பான் கிரிக்கெட் அணிக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையில் ஜப்பான் கிரிக்கெட் அணியினர் ஏழு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

இதனை முன்னிட்டு 19 வயதுக்குட்பட்ட நான்கு மாகாண அணிகளை ஜப்பான் அணியுடன் விளையாடவைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் இணங்கியுள்ளது.

போட்டி மத்தியஸ்தர்களையும் பதிவாளர்களையும் ஏற்பாடு செய்துகொடுக்கவும் போட்டிகளுக்கான பந்துகளை வழங்கவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்வந்துள்ளது. மைதான வசதிகளையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் செய்துகொடுக்கும்.

ஜப்பான் விளையாடவுள்ள ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகள் மக்கொன சரே மைதானத்திலும் இரண்டு போட்டிகள் கொழும்பு என்.சி.சி. மைதானத்திலும் நடைபெறும்.

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்கனவே  வழங்கிய ஒத்துழைப்புகள் அதன் எல்லைக் கடந்த அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இலங்கை பயிற்சியாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள், வளர்ந்துவரும் வீரர்கள் அணியினர்  ஆகியோரை ஜப்பானுக்கு அனுப்புதல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு நிபுணத்துவத்தை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்புகள், பரிமாற்றங்கள், கிரிக்கெட் நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்குவதாக அளித்த உறுதிப்பாட்டுக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCAது) ஆகியவற்றுக்கு இடையே கடந்த வருடம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button