
அனுராதபுரம் – பெரிமியன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.





