
யுக்ரைனின் தலைநகர் கீவ்-வின் பல பகுதிகளில் ரஷ்யா பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
309 ஆளில்லா விமானத்தாக்குதல்கள், மற்றும் 8 ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில், 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 155 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படாவிடின் , ரஷ்யா மீது 100 வீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





