
தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்
தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் நடத்தப்படும் தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது




தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் மற்றும் கரைத்துறை பற்று பல நோக்கு கூட்டுறவு சங்க உப தலைவர் செந்தூரன் அவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி செயலாளர் ஸ்ரீபிரசாத் மற்றும் மாங்குளம் பிரதேச பொறுப்பாளர் பிறேம் ஆகியோரும் கலந்து கொண்டு வங்கிக் கணக்கு புத்தகங்களை வழங்கி சிறுவர்களை கௌரவித்தனர்.






