இந்தியாதமிழீழம்

வவுனியாவைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் நான்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட நால்வர் இன்று (31) காலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை தமிழர்கள் தஞ்சமடைந்துள்ள தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற மரைன் காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் என தெரியவந்துள்ளது. விசாரணையின் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button