தமிழீழம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் நடத்தப்படவுள்ளது.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தினம் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button