சுவிஸ்

மரணத்தைப் பற்றிப் பேச ஒரு காபி: டிசினோவில் “டெத் கஃபே” சந்திப்புகள்

டிசினோ மாநிலத்தில் (Ticino) “டெத் கஃபே” என்ற புதிய சந்திப்புகள் பிரபலமாகி வருகின்றன. மரணத்தைப் பற்றி இயல்பாகப் பேசுவதற்காக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி இது.

டெத் கஃபே என்றால், தேநீர், காபி, சிற்றுண்டியோடு மரணத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசும் சந்திப்பு. ஒரு நடத்துநர் இருப்பார். சுமார் 10 பேர்தான் கலந்துகொள்வார்கள். இது குழு சிகிச்சையும் இல்லை, வகுப்பும் இல்லை. யாரும் அறிவுரை சொல்ல மாட்டார்கள்.

மாசாக்னோவில் (Massagno) உள்ள ஒரு புத்தகக் கடையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 4 சந்திப்புகள் நடக்கின்றன. நான்கிலும் இடம் முழுதாக நிரம்பிவிட்டது. வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களுக்குத் துணையாக இருக்கும் அடெல்மா அறக்கட்டளை (Fondazione Adelma) இவற்றை ஏற்பாடு செய்கிறது.

தொடக்கத்தில் ஒவ்வொருவரும் “மரணம் என்றால் என்ன?” என்பதை ஒரு சிறு சீட்டில் பெயர் போடாமல் எழுதினார்கள். அங்கிருந்து பேச்சு தொடங்கியது. சோகமாக இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் சிரிப்பும் கலகலப்பும் அடிக்கடி வரும். தங்களுக்கு இருக்கும் பயம் மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியும்போது மனம் லேசாகிறது என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். முன்பு பலர் வீட்டிலேயே குடும்பத்தோடு இறந்தார்கள். இப்போது அப்படிப் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த யோசனையை 2004-ல் வலே மாநிலத்தைச் (Valais) சேர்ந்த பெர்னார்ட் க்ரெட்டாஸ் (Bernard Crettaz) தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் டெத் கஃபேக்கள் நடக்கின்றன. கட்டணம் கிடையாது. எல்லோரும் வரலாம். அங்கே பேசியது வெளியே போகாது. விதிகளைப் பின்பற்றினால் யார் வேண்டுமானாலும் தங்கள் சமூகத்தில் ஒரு டெத் கஃபே நடத்தலாம்.


மூலம்: RSI
புகைப்படம்: Zulfi A / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button