சுவிசின் தெசின் மாநிலத்தில் (Ticino) உள்ள பெலிஞ்சோனா (Bellinzona) நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு ஓநாய் தென்பட்டது. செமினே (Semine) பகுதியிலும், பின்னர் கமொரினோ (Camorino) அருகிலும் அது காணப்பட்டது.
மாநிலத்தின் வேட்டை மற்றும் மீன்பிடி அலுவலகம் (Ufficio caccia e pesca) இதை உறுதி செய்தது. அந்த அலுவலகத்தின் காட்டு விலங்கு காவலர் ஒருவர் நேரில் போய் ஓநாயைப் பார்த்தார்.
ஓநாய் யாரையும் தாக்க வரவில்லை. ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் குழம்பியது போல் இருந்தது. பிறகு அது மலைப் பகுதிக்குப் போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் அதைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். வீடுகள் உள்ள பகுதிகளுக்குள் அடிக்கடி வராமல் இருக்கவும், மனிதர்களைக் கண்டு பழகிவிடாமல் இருக்கவும் இந்தக் கண்காணிப்பு நடக்கிறது.
மூலம்: RSI
புகைப்படம்: Hans Veth / Unsplash





