சுவிஸ்

மிக்ரோ இணைப்புத் திட்டம்: சிறு விவசாயிகளுக்கு என்ன ஆகும்?

மிக்ரோ (Migros) கடைச் சங்கிலியின் இணைப்புத் திட்டம் சுவிஸ் சிறு விவசாயிகளுக்குக் கவலை தந்துள்ளது. இது தொடர்பாக “Faire Märkte” என்ற அமைப்பு, போட்டி விதிகளைக் கண்காணிக்கும் சுவிஸ் அரசு ஆணையத்திடம் (COMCO) முறையிட்டுள்ளது.

மிக்ரோவுக்குள் இப்போது 10 பிராந்தியக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றை ஒரே அமைப்பாக இணைப்பதுதான் திட்டம். பெரிய கடைகள் உற்பத்தியாளர்கள் மீது எவ்வளவு அதிகாரம் செலுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதே Faire Märkte அமைப்பின் வேலை.

இணைந்தால் மிக்ரோ இன்னும் பலமாகிவிடும் என்பது அந்த அமைப்பின் பயம். விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலையைக் குறைத்துவிடலாம். சிலரின் பொருட்களைக் கடை அலமாரிகளிலிருந்தே நீக்கிவிடலாம். அதனால் நியாயமான விலை தருவதற்கு உறுதி அளிக்குமாறு மிக்ரோவிடமும் கேட்டுள்ளது.

மிக்ரோவின் சூப்பர்மார்க்கெட் பிரிவுத் தலைவர் குயிடோ ராஸ்ட் (Guido Rast) பதில் சொல்லியுள்ளார். விவசாயத் துறையின் அடிப்படை விலைகளை மிக்ரோ தொடர்ந்து பின்பற்றும் என்று அவர் கூறினார்.

டிச்சினோ மாநில (Ticino) விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் செம் ஜெனீனி (Sem Genini) இப்போதைக்குக் கவலைப்படவில்லை. விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை என்கிறார். உள்ளூர்ப் பொருட்களை ஊக்குவிக்கும் இப்போதைய போக்கு மாறக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. கோப் (Coop) 2001-லேயே தன் பிராந்திய சங்கங்களை இணைத்துவிட்டது. அங்கும் விவசாயிகள் நிறையப் பொருட்களை விற்கிறார்கள்.

மிக்ரோவுக்கு இன்னும் நீண்ட பாதை இருக்கிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்தத் திட்டத்துக்கு வாக்களிக்க வேண்டும். வாக்கெடுப்பு 2027 நடுப்பகுதியில் நடக்கும்.


மூலம்: RSI
புகைப்படம்: nrd / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button