சுவிஸ்

மருத்துவச் செலவு வரம்பு: பெடரல் அரசு மீது டாக்டர்கள் சங்கத் தலைவர் அதிருப்தி

சுவிஸ் டாக்டர்கள் சங்கத்தின் (FMH) தலைவர் Yvonne Gilli, மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்த பெடரல் அரசு கொடுத்த உத்தரவை விமர்சித்துள்ளார். ஆனாலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சனிக்கிழமை ரேடியோ SRF-இல் சொன்னார்.

டாக்டரிடம் போய் பார்த்துவிட்டு அன்றே வீடு திரும்பும் சிகிச்சைகளின் செலவு, ஆண்டுக்கு 4 சதவீதத்துக்கு மேல் உயரக்கூடாது என்று பெடரல் அரசு (Bundesrat) விரும்புகிறது. இதற்கு டாக்டர்கள், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு திட்டம் தர வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து அரசு இதைக் கேட்கிறது. இன்னும் திட்டம் வரவில்லை.

அதனால் புதன்கிழமை சுகாதாரத் துறைக்கு (அமைச்சர் Elisabeth Baume-Schneider) ஒரு பணி கொடுத்தது. வரம்பை மீறினால், தேவைப்படும்போது தலையிடத் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது.

Gilli இதை ஏற்கவில்லை. இப்படி உத்தரவு போட பெடரல் அரசுக்கு உரிமை இல்லை என்கிறார். அதற்குச் சட்ட அடிப்படையும் இல்லை என்கிறார். கடுமையான வரம்பு மக்களின் மருத்துவ சேவையை ஆபத்தில் தள்ளும் என்றும் சொல்கிறார். புதிய, விலை அதிகமான மருந்துகள் வந்தால் செலவு உயரத்தான் செய்யும் என்பது அவர் வாதம்.

இருந்தாலும் அவர் பேச்சுக்குத் தயார். பெடரல் அரசு புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் சில தீர்வு வழிகள் உள்ளன. அடிப்படை மருத்துவ சேவைக்காகச் செய்த மேம்பாடுகளை இந்த நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளக்கூடாது என்று அதில் இருக்கிறது. மருத்துவமனையில் தங்க வைக்காமல் அதிகமாக வெளியில் சிகிச்சை தரும் பகுதிகளுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்றும் சொல்கிறது. அதனால் பேசுவதற்கு இடம் இருக்கிறது என்கிறார் Gilli. நிலைமை முன்பு போல் மோசமாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.


மூலம்: SRF
புகைப்படம்: Marco Pregnolato / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button