சுவிஸ்

லோசான் EPFL-இல் செயற்கை நுண்ணறிவுக்குப் புதிய பட்டப்படிப்பு

லோசானில் (Lausanne) உள்ள சுவிஸ் கூட்டாட்சித் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் EPFL, செயற்கை நுண்ணறிவுக்கு (AI) என்று புதிய பட்டப்படிப்பைத் தொடங்குகிறது. இது 2027-2028 கல்வியாண்டில் ஆரம்பமாகும். இந்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியானது.

இந்தப் படிப்பில் கணிதமும் கணினியியலும் (informatique) அடிப்படையாக இருக்கும். AI அமைப்புகளைப் புரிந்துகொள்ளவும், உருவாக்கவும், சோதிக்கவும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

முதல் ஆண்டு, கணினியியல் இளங்கலைப் படிப்பு மாணவர்களோடு சேர்ந்தே படிப்பார்கள். இரண்டாம் ஆண்டிலிருந்து இரண்டு படிப்புகளும் தனித்தனியாகப் பிரியும்.

பாடங்கள் புத்தகப் படிப்போடு நின்றுவிடாது. நேரடியாகச் செய்யும் திட்டங்களும் உண்டு. ரோபோட்டிக்ஸ், உயிரியல் அறிவியல், AI கோட்பாடு போன்ற துறைகளில் மாணவர்கள் சிறப்புப் பயிற்சி எடுக்கலாம்.

AI சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் நெறிமுறைகளையும் பற்றிய ஒரு பாடம் கட்டாயம். முதல் ஆண்டு புரோகிராமிங் வகுப்புகள் பிரெஞ்சில் நடக்கும். இரண்டாம், மூன்றாம் ஆண்டு வகுப்புகள் ஆங்கிலத்தில் நடக்கும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Nguyen Dang Hoang Nhu / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button