சுவிசில் S அனுமதியுடன் வாழும் உக்ரைன் அகதிகள் இனிமேலும் வெளிநாடுகளுக்குப் போய்வரலாம். இதற்குத் தனியாக அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்கான சட்டத் திருத்தத்தை சுவிஸ் மத்திய அரசு (Federal Council) புதன்கிழமை முன்வைத்தது.
S அனுமதி என்பது போரில் இருந்து தப்பி வந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தற்காலிகப் பாதுகாப்பு அனுமதி. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, 2022 மார்ச்சில் இது தொடங்கப்பட்டது. அப்போதே உக்ரைன் அகதிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்றும் முடிவானது.
அதற்கு முன், 2021 டிசம்பரில் நாடாளுமன்றம் ஒரு புதிய விதியை ஏற்றிருந்தது. தற்காலிகமாகத் தங்க அனுமதி பெற்றவர்கள், புகலிடம் கேட்டவர்கள், தற்காலிகப் பாதுகாப்பில் இருப்பவர்கள் ஆகியோர் வெளிநாடு போகலாம். ஆனால் விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டும்.
அந்த விதி இன்னும் அமலுக்கு வரவில்லை. போர் தொடங்கியதால் S அனுமதி வந்தது. உக்ரைன் அகதிகளுக்குப் பயண சுதந்திரமும் கொடுக்கப்பட்டது.
இப்போது மத்திய அரசு இவர்களுக்கென்று தனி விதியை முன்மொழிந்துள்ளது. அதன்படி உக்ரைன் அகதிகள் அனுமதி இல்லாமலே சுவிசை விட்டுப் போகலாம், திரும்பியும் வரலாம்.
மூலம்: RSI
புகைப்படம்: Chandler Cruttenden / Unsplash





