சுவிஸ்

சுவிஸ் நெடுஞ்சாலைகள் நல்ல நிலையில்: ஆண்டுக்கு 1.2 பில்லியன் பிராங்க் செலவு

சுவிஸ் தேசிய நெடுஞ்சாலைகள் பொதுவாக நல்ல நிலையில் இருப்பதாக சுவிஸ் சாலைகளுக்கான மத்திய அலுவலகம் (Astra) அறிவித்துள்ளது. இவற்றைப் பராமரிக்க அரசு ஆண்டுக்குச் சுமார் 1.2 பில்லியன் பிராங்க் செலவிடப் போகிறது.

சுவிஸ் முழுவதும் 2250 கிலோமீட்டர் நீளத்துக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அவற்றின் நிலை கடந்த ஆண்டைப் போலவே இருக்கிறது. சாலையின் மேற்பரப்பு மிக நன்றாக உள்ளது. பாலங்களும் சுரங்கப்பாதைகளும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன.

மூன்று சுரங்கப்பாதைகள் மட்டும் மோசமான நிலையில் உள்ளன. இரண்டு கிராபுண்டன் மாநிலத்தில் (Graubünden) உள்ளன: சோலிஸ் (Solis), பாஸ்மால் (Passmal). மூன்றாவது பாசல்-ஸ்டாட் மாநிலத்தில் (Basel-Stadt) உள்ள ஷ்வார்ஸ்வால்ட் (Schwarzwald) சுரங்கப்பாதை. இவற்றின் பழுதுபார்ப்பு ஏற்கனவே நடக்கிறது, அல்லது திட்டமிடப்பட்டுள்ளது.

பல சாலைகள் பல பத்தாண்டுகள் பழையவை. அவற்றை முழுமையாகப் புதுப்பிக்க வேண்டிய நேரம் வருகிறது. ஆனால் வாகனங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. சின்னத் தடை வந்தாலே நெரிசல் ஏற்படும். அதனால் வேலைகளை ஒன்றாகச் சேர்த்து, போக்குவரத்துக்குக் குறைவான தொந்தரவு வரும்படி Astra திட்டமிடுகிறது. சூரிக் மாநிலத்தில் உள்ள குப்ரிஸ்ட் சுரங்கப்பாதையில் (Gubrist) கூடுதல் குழாய் அமைத்தது இதற்கு ஓர் உதாரணம்.

2026 முதல் 2030 வரை ஆண்டுக்குச் சராசரியாக 1.19 பில்லியன் பிராங்க் ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணம் முழுவதும் வாகன ஓட்டிகள் செலுத்தும் குறிப்பிட்ட கட்டணங்களிலிருந்தே வருகிறது.


மூலம்: SRF
புகைப்படம்: Gabriel Garcia Marengo / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button