பெர்ன் மாநிலத்தின் ஜூரா பகுதியில் உள்ள லா நவ்விள் (La Neuveville) அருகே, சனிக்கிழமை இரவு 6 வயதுச் சிறுவன் ஒரு பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டான். சுவிஸ் மீட்பு ஹெலிகாப்டர் அமைப்பான ரேகா (Rega) அவனை மீட்டது.
பிலூவி பள்ளத்தாக்கில் (Pilouvi) அன்று இரவு மழை பெய்தது. பனிமூட்டமும் இருந்தது. சிறுவனின் உடல் வெப்பம் ஆபத்தான அளவுக்குக் குறைந்துவிட்டது. முதலில் பெர்ன் மாநிலப் போலீசார் அவனிடம் போய்ச் சேர்ந்தார்கள்.
ஆனால் அவனை வெளியே கொண்டுவருவது எளிதாக இல்லை. அடர்ந்த காடு இருந்தது. மழையிலும் பனியிலும் பெரிய விளக்குகளைப் போட்டால் வெளிச்சம் திரும்பி மீட்புப் படையினரின் கண்களைக் கூசச் செய்யும். அதனால் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்த முடியவில்லை. மரங்களில் மோதாமல் இருக்க, ஹெலிகாப்டரிலிருந்து சுமார் 80 மீட்டர் நீளக் கயிறு இறக்கப்பட்டது.
அவசர சிகிச்சை பெண் மருத்துவர் ஒருவர் கயிற்றில் இறங்கினார். சிறுவனிடமிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் காட்டின் திறந்த இடத்தில் இறங்கி, முதலுதவி செய்தார். பிறகு போலீசாரின் உதவியுடன் சிறுவன் ஒரு வெட்டவெளிக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கிருந்து கயிற்றில் மேலே தூக்கப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்.
இரவிலும் பார்க்க உதவும் சிறப்புத் தொலைநோக்கிகளை மீட்புக் குழு பயன்படுத்தியது. ரேகாவின் மீட்புப் பணிகளில் 4-இல் ஒன்று இரவு நேரத்தில் நடப்பதாக அந்த அமைப்பு திங்கட்கிழமை தெரிவித்தது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Lincoln Holley / Unsplash





