டிசினோ மாநிலத்தின் லுகானோ (Lugano) நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் ஒரு பெரிய முதலீட்டு மோசடி வழக்கு நடக்கிறது. “பிரிட்ஜ்” (Bridge) என்ற முதலீட்டு நிதி மூலம் கிட்டத்தட்ட 150 பேரிடம் 8 மில்லியன் யூரோவுக்கு மேல் ஏமாற்றியதாக ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு.
இதன் தலைவர்கள் மூன்று பேர். ஒருவர் 39 வயது இத்தாலியர். தொழில் பிட்சா தயாரிப்பு. இப்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மற்ற இருவர் இந்தியர்கள். ஒருவர் இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார். இன்னொருவர் தலைமறைவாக இருக்கிறார்.
இவர்கள் “பான்சி” (Ponzi) முறையைப் பயன்படுத்தினர். புதிதாக முதலீடு செய்பவரின் பணத்தை எடுத்து, பழைய முதலீட்டாளர்களுக்கு வட்டியாகக் கொடுக்கும் மோசடி இது. இவர்களுடன் 46 வயது சுவிஸ்காரரும் 28 வயது இத்தாலியரும் “ஏஜென்ட்” ஆகச் செயல்பட்டனர். கமிஷன் வாங்கிக்கொண்டு ஆட்களைச் சேர்த்தனர். சாதாரண நிதிகளை விட பல மடங்கு லாபம் தருவதாகச் சொன்னார்கள்.
முதலில் உறவினர்களையும் நண்பர்களையும் இழுத்தார்கள். பிறகு வலையைப் பெரிதாக்கினார்கள். ஏமாந்தவர்களில் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருக்கிறார். ஒவ்வொருவரும் 10,000 முதல் 250,000 யூரோ வரை போட்டிருந்தனர்.
இரண்டு ஏஜென்ட்களும் சில விஷயங்களை ஒப்புக்கொண்டனர். ஆனால் இது மோசடி என்று முதலில் தங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள். 39 வயது இத்தாலியரும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். அந்த இரண்டு இந்தியர்களுக்காக ஏஜென்டாக வேலை செய்ததாகச் சொல்கிறார். அரசு வழக்கறிஞர் கியாரா போரெல்லி (Chiara Borelli) ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கேட்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்: RSI
புகைப்படம்: Markus Winkler / Unsplash





