சுவிஸ்

நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கி.மீ? சுவிஸில் எழுந்துள்ள விவாதம்

சுவிஸ் நெடுஞ்சாலைகளில் வேகத்தை மணிக்கு 80 கிலோமீட்டராகக் குறைக்கும் யோசனையை சுவிஸ் அரசு பரிசீலிக்கிறது. எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை வந்தால், பெட்ரோலை மிச்சப்படுத்துவதே இதன் நோக்கம்.

இப்போதைக்கு நிலைமை மோசமில்லை. ஆனால் சில வாரங்களுக்கு முன்பே விமான எரிபொருள் (கெரோசின்), டீசல் ஆகியவற்றின் அவசரகால இருப்பு விடுவிக்கப்பட்டது. சுவிஸுக்குத் தேவையான சிறப்புத் தர டீசல் ஐரோப்பாவில் கிடைக்கவில்லை என்பதே காரணம். பெட்ரோலும் வீடுகளுக்கான எரிபொருள் எண்ணெயும் தற்போது போதுமான அளவு உள்ளன.

ஈரான், உக்ரைன் போர்கள் கவலை தருகின்றன. ரைன் ஆற்றில் (Rhein) மீண்டும் வறட்சி வரலாம் என்பதும் கவலைதான். அப்படி நடந்தால் டீசல், பெட்ரோல் சுவிஸுக்கு வந்து சேர்வது கடினமாகும்.

மெதுவாக ஓட்டினால் எரிபொருள் மிச்சமாகும் என்பதை சுவிஸ் வாகன ஓட்டுநர் சங்கம் (TCS) ஒப்புக்கொள்கிறது. ஆனால் மிச்சமாவது மாதத் தேவையில் 20-ல் ஒரு பங்குதான். கார் ஓட்டுபவர்களை மட்டும் பாதிக்கும் இந்த நடவடிக்கையால் உலகளாவிய நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்கிறது. சுவிஸ் ஆட்டோமொபைல் கிளப் (ACS), இது கடைசி வழியாக இருந்து, உண்மையிலேயே கடும் பற்றாக்குறை இருந்தால் மட்டும் எதிர்க்காது என்று சொல்கிறது.

இன்னொரு சிக்கலும் உண்டு. நெடுஞ்சாலையில் மெதுவாகப் போக வேண்டும் என்றால், பலர் மாநிலச் சாலைகளுக்கு மாறிவிடுவார்கள். அங்கே நெரிசல் அதிகமாகும். அதனால் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று TCS கேட்கிறது.


மூலம்: RSI
புகைப்படம்: Diane Picchiottino / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button