சமீப நாட்களில் ஐரோப்பாவிலும் சுவிஸிலும் ஹேக்கர் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. ஆனால் தாக்குதல்களின் எண்ணிக்கை பெரிதாகக் கூடவில்லை என்கிறார் டெசின் (Ticino) மாநில நிபுணர் ஒருவர். தாக்குதல்களின் தரம்தான் கூடியிருக்கிறதாம்.
பிரான்சிலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் ஃப்ரீசர்களை ஹேக்கர்கள் கெடுத்தனர். சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின் திருடப்பட்டது. உக்ரைனிலும் ரஷ்யாவிலும் எச்சரிக்கை ஆப்களில் பொய்யான தகவல்கள் வந்தன. சுவிஸிலும் அரசு இணையதளங்கள் உட்பட பல இடங்களில் தகவல்கள் திருடப்பட்டன.
டெசின் மாநில அரசு ஏழு ஆண்டுகளுக்கு முன் இணையப் பாதுகாப்புக்காக ஒரு குழுவை (Cyber Sicuro) அமைத்தது. அதன் நிபுணர் சில்வானோ பெத்ரினி (Silvano Petrini) இப்படிச் சொல்கிறார்: ஹேக்கர்கள் இப்போது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறார்கள். அதனால் தாக்குதல்கள் இன்னும் திறமையாகவும் பலவிதமாகவும் வருகின்றன. ஆனால் பாதுகாக்கும் பக்கமும் AI-யைப் பயன்படுத்துகிறது. அதனால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.
லிஃப்ட், பெரிய ஃப்ரீசர், அறை வெப்பநிலை கட்டுப்பாடு போன்றவற்றை இயக்கும் கணினி அமைப்புகள் இணையத்தோடு இணைந்திருக்கின்றன. பல இடங்களில் தொழிற்சாலை பாஸ்வேர்டையே மாற்றாமல் விட்டுவிட்டார்கள். அதனால் ஹேக்கர்களுக்கு எளிதாகிறது.
பெரும்பாலான தாக்குதல்கள் போலி இமெயில் மூலம்தான் வருகின்றன. இமெயிலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்ய வைப்பதுதான் அவர்களின் வழி. இப்போது இந்த இமெயில்கள் உண்மையானவை போலவே இருக்கின்றன. அதனால் வீட்டிலும் வேலையிலும் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். பாதுகாப்பு முதலாளியின் பொறுப்பு மட்டுமல்ல.
மூலம்: RSI
புகைப்படம்: Kasia Derenda / Unsplash





