இலங்கைதமிழீழம்

36 ஆண்டுகளுக்குப் பின் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுச் சாதனை: தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 12வது இடம்பிடித்து அசத்தல்!

 

இலங்கையின் கொழும்பில் அண்மையில் (30, 31 மற்றும் 01 ஆகிய தினங்களில்) நடைபெற்ற 36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில், மன்னார் மாவட்டம் 12வது இடத்தினைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த காலங்களில் 23, 24 மற்றும் 25ஆம் இடங்களையே பெற்றுவந்த மன்னார் மாவட்டம், இவ்வாண்டு (2026) இரண்டு தங்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிகளைத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், தேசிய ரீதியில் 12வது இடத்தினையும் பிடித்து அசத்தியுள்ளது. அத்துடன், மன்னார் மாவட்ட வரலாற்றிலேயே அதிகளவான இளைஞர், யுவதிகள் இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயக உறவுகளின் இந்த எழுச்சியும் சாதனையும், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்கால விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது.

இச்சாதனைக்குப் பின்னணியில் நின்று ஓயாது உழைத்த மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் (AD), மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி (DYSO) மற்றும் அனைத்து இளைஞர் சேவை அதிகாரிகளுக்கும் சுவிஸ் தமிழர் தகவல் மையம் சார்பாக எமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்புச் சாதனை படைத்த வீர வீராங்கனைகள்:

• சரப் (நானாட்டன் பிரிவு): 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.

• பூப்பந்தாட்ட (Badminton) அணியினர்: தமது அசாத்திய திறமையால் போட்டிகளில் முதலிடத்தினைத் தமதாக்கிக் கொண்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

• கால்பந்தாட்ட (Football) அணியினர்: கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் போராடி இரண்டாம் இடத்தினைத் தமதாக்கிக் கொண்டு கெத்து காட்டியுள்ளனர்.

• செல்வி ஜதுர்சிகா: ஈட்டியெறிதல் (Javelin Throw) நிகழ்வில் தனது திறமையை வெளிப்படுத்தி நான்காம் இடத்தினைத் தனதாக்கியுள்ளார்.

வெற்றிபெற்ற அனைத்து வீர வீராங்கனைகளும் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியிலும் சாதனை படைக்க சுவிஸ் தமிழர் தகவல் மையம் – www.swisstamilinfo.ch சார்பாக மனதார வாழ்த்துகிறோம்!

 

#Mannar #MannarSports #NationalYouthSportsFestival #SwissTamilInfo #TamilNews #MannarYouth #DiasporaNews #MannarProud
#SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button