இலங்கைஉலகம்

இலங்கை மாணவர்களுக்கு கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கொரிய குடியரசின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டிருந்தது.

இருப்பினும், அதில் காணப்பட்ட ஒருசில ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக இதுவரை அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனது.

இதன் காரணமாக, பங்காளர்களிடையே முறையான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு பிரதான 5 தரப்பினரையும் உள்ளடக்கி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகமும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் இலங்கை மாணவர்களுக்கு கொரிய குடியரசின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கொரிய குடியரசின் குறித்த மாகாணம், சசோன் வணிக மற்றும் கைத்தொழில் பேரவை மற்றும் வெங்க்சின் பல்கலைக்கழகம் ஆகிய பங்காளர்களுக்கிடையே இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button